நீரில் நனைந்தும் நனையாத அக்கினியை வேரினில் கொண்டானே வித்தகன்-நாரிலே கல்லுரிக் கும்சிவனை காணுமண் ணாமலையில் உள்ளுரித்துக் கண்டான் உவந்து. ஆனை புகுந்தவுடல் ஆக உடலசைய ஞான முனிவன் நடைபயின்றான் -தேனை அருந்திச் செரித்த அறுகாலாய்…

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன் இசைபோல வடிவின்றி ஆனான் கண்ணா என்றழைக்கின்ற நாவும்-அதில் களிகொண்டு விளைகின்ற பாவும் எண்ணாத விந்தையென யாரும்-தினம் எண்ணியெண்ணிக் கொண்டாடும் சீரும் கொண்டு இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன் இசைபோல வடிவின்றி ஆனான்…

கடவுளின் கைப்பேசி பார்த்தேன் -அவர் கூப்பிட்ட ஒரே நண்பன் நீதான் நடைபோட்டு உன்வாசல் சேர்ந்தேன் -என் வழியெங்கும் ஒரேகாவல் நீதான் தடைபோட்ட எல்லாமே மாறி-உன் திசைகாட்டி நிற்கின்றதே விடைகேட்டு போகின்ற எல்லாம் -உன் வழிகேட்டு…

அவளுக்கு வடிவம் கிடையாது அழகுகள் எல்லாம் அவள் வடிவே அவளுக்குப் பெயரொன்று கிடையாது ஆயிரம் பெயர்களும் அவள்பெயரே அவளுக்கு நிகரிங்கு கிடையாது அவளுக்கு அவள்தான் ஒருநிகரே கவலைகள் எனக்கினி கிடையாது காளிவந்தாள் என் கண்ணெதிரே…

மனக்கேடு கொண்டெழுப்பும் கோட்டை-அது மணல்வீடாய் சரிந்துவிழும் ஓட்டை குணக்கேடு தீரேன்நீ பராசக்தி பாரேன்என் ஏட்டை-என்ன -சேட்டை குச்சியிலே கோடிழுத்தா கோலம்?-எனை குற்றம்சொல்லி துப்புதடி காலம் உச்சகட்டம் என்நடிப்பு உள்ளகதை உன்நினைப்பு தூலம்-அலங்-கோலம்  கோயிலுக்குள் நின்றுகொண்ட…

அர்ச்சனை நேரத்தில் இட்டமலர் அரைநாள் சென்றால் சருகாகும் உச்சி முகர்பவர் சொல்லொருநாள் உதறித் தள்ளும் பழியாகும் பிச்சியின் கூத்துகள் இவையெல்லாம் பாடம் நமக்கு நடத்துகிறாள் இச்சைத் தணலை அவித்துவிட்டு இலையைப் போடவும் சொல்லுகிறாள் மண்ணில்…

கொட்டோடு முழக்கோடு கொலுவிலேறினாள் -அன்னை கொள்ளையெழில் பொங்கப் பொங்க மனதிலேறினாள் பொட்டோடு பூவோடு மாதர்வாழவே -அன்னை பூரணமாய் கருணைதந்து பரிவுகாட்டினாள் தீபத்தின் ஒளியினிலே தகதகக்கிறாள்-அன்னை திருவிளக்கின் சுடராகத் தானிருக்கிறாள் நாபிதனில் ஒலியாக  நிறைந்திருக்கிறாள்-அன்னை நாதத்துள்…

சங்கல்பம் கொண்டு சமர்செய்ய வந்திங்கு மங்கலை கொண்டாள் மகாவெற்றி-எங்கெங்கும் நல்லவையே வென்றுவர நாயகி நாமங்கள் சொல்லிப் பணிந்தால் சுகம். புத்தி வலிவும் பொருள்பலமும் பாங்கான உத்தி பலமுமே உத்தமிதான் -சத்தியவள் போடும் கணக்கின் பதிலீட்ட…

அலைகள் புரண்டெழும் ஓசையிலே-ஓர் அழகியின் சிரிப்பொலி கேட்கிறது விலைகள் இல்லாப்  புதையல்களில்-அவள் வண்ணத் திருமுகம் தெரிகிறது நிலைபெறும் பாற்கடல் பாம்பணையில்-அந்த நாயகி சரசம் நிகழ்கிறது வலைவிழும் மீன்களின் துள்ளலைப்போல்-அவள் விழிபடும் இடமெலாம் கொழிக்கிறது அறிதுயில்…