புகைப்படம்: வேற யாரு?அதுவும் அந்தச் சுகாதான்!! இந்தக் கேள்வியை 2005ல் முனைவர்.கு.ஞானசம்பந்தனிடம் கேட்பேன். “இப்போ ஷூட்டிங்தான்.நீங்க?”என்பார் பதிலுக்கு.நானும் ஷூட்டிங்தான் என்பேன். அப்போது நான் கஸ்தூரிமான் படத்தில் நடித்துக் (?) கொண்டிருந்தேன். பேராசிரியரும் படங்களில் நடித்துக்…

(13.04.2013 அன்று நிகழ்ந்த முத்திரைக் கவியரங்கில் வாசித்த கவிதை) வணக்கம்! தலைப்புச் செய்திகள்..தனியாய் இல்லை! துச்சாதனனின் இழுப்பில் வளர்ந்த திரௌபதி புடவைத் தலைப்பைப் போல மலைக்கவும் வைத்து களைக்கவும் வைக்கும் நடப்புகள் நாட்டில் நிறைய…

பவானி  பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் பேராசிரியர் வெற்றிவேல் பேசினார்.”எங்க ஆண்டுவிழாவுக்கு வர ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. உங்களை பவானிக்கு அழைத்து வர நம்ம மாணவர் ஒருவர் வருவாருங்க”.பல கல்லூரிகள் சிறப்பு விருந்தினரை அழைத்து வர…

 வானம் எனக்கென வரைந்து கொடுத்த  வரைபடம் ஒன்றுண்டு நானே என்னைத் தேடி அடைந்திட நேர்வழி அதிலுண்டு ஊனெனும் வாகனம்   ஓட்டி மகிழ்வது ஒருதுளி உயிராகும் ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது எங்கோ அதுபோகும் காலம் அமைக்கிற…

திருநீறு தினம்பூசி தேவாரத் தமிழ்பாடி வருவோரை சிவன்காக்கும் அருணாசலம்-அவன் மடிமீது மகிழ்ந்தேறி ஓங்காரப் பொருள்கூறும் மகன்வாழும் தலம்தானே மருதாசலம் சிவன்வாழும் மலைதானே அருணாசலம்-அவன் மகன்வாழும் தலம்தானே மருதாசலம்! சிவநாமம் தினம்கூறி பனிபாயும் கொடியாகி உமையாளும்…

“ஆலம் விதையோ பூமியிலே ஆழ்ந்து வேர்கள் பதிக்கிறது காலம் கடந்தபின் விழுதெல்லாம் கனிவாய்த் தாங்க வருகிறது!” காலங் காலமாய் இப்படித்தான் கதைகள் சொன்னார் நம்பிவந்தேன் ஆலின் நுண்ணிய ஆன்மாவை ஆழ்கன வொன்றில் கண்டுகொண்டேன் “வேருக்கு…

பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கும் ஒருவர்,மதுரைக்குப் போகும் வழியில் தன் அலுவலர் ஒருவரிடம் சிலவற்றை சொல்வதற்காக அலைபேசியில் அழைத்திருக்கிறார்.”மதுரைக்குப் போகாதேடீ”என்ற பாடல் ஒலித்ததும் அதிர்ந்து போன அவருக்கு சொல்ல வந்தது மறந்துபோனது. அவர் மதுரைக்குப் போனார்.அந்த அலுவலர் அடுத்த நிமிடமே அந்தப் பாட்டை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டு அந்த அலைபேசி நிலையத்துக்கே போனார்.ஒருகாலத்தில் நான் மதுரைக்கு மாதம் ஒருமுறையாவது போவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதாவது தொண்ணூறுகளின் தொடக்கத்தில்…. ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாய் எனக்கு…

ஓவியம் :திரு.ஜீவா தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள்.பெரும்பாலானவர்கள்கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள் உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த…

புயல்நடுவே சிற்றகலும் புன்னகைக்கு மென்றால் கயல்கண்ணி பார்த்த கருணை-ஒயிலாக சந்நிதி யில்நிற்கும் சக்தியருள் பெற்றபின்னே நன்னிலைதான் சேரும் நமக்கு. பட்டுரசும் பாதங்கள் பூமி தனிலுரச மொட்டவிழும் கற்பகப்பூ மண்ணெங்கும்-எட்டுதிசை வீசும் வளைக்கரங்கள் வையமெலாம் காப்பதனைப்…