தேனமுதம் அலைவீசும் தெய்வீகப் பாற்கடலில் வானமுதின் உடன்பிறப்பாய் வந்தாய்- வானவரின் குலம்முழுதும் வாழவைக்கும் மாலவனின் வண்ணமணி மார்பினிலே நின்றாய் சீதமதி விழிபதித்து செல்வவளம் நீகொடுத்து சோதியெனப் புதுவெளிச்சம் தருவாய் வேதமுந்தன் வழியாக வெண்ணிலவு குடையாக…
தள்ளிநிற்கும் படித்துறையைத் தாவித்தொடும் கங்கைநதி தாளமிடப் பாடுபவளாம் அள்ளிவைத்த பூக்களிடை உள்ளுறையும் விஸ்வேசன் உள்ளமெங்கும் ஆடுபவளாம் கள்ளமுற்ற நெஞ்சினையும் வெண்பளிங்காய் மாற்றியதில் கோயில்கொண்டு வாழுபவளாம் விள்ளலன்னம் கையில்விழ விம்மிவிம்மி நெஞ்சமழ வினைதீர்க்கும் அன்னையவளாம் பேசுமொழி…
காலைவரை காத்திருக்கத் தேவையில்லையே-அவள் கண்ணசைத்தால் காலைமாலை ஏதுமில்லையே நீலச்சுடர் தோன்றியபின் வானமில்லையே-அவள் நினைத்தபின்னே தடுப்பவர்கள் யாருமில்லையே சொந்தமென்னும் பகடைகளை உருட்டச் சொல்லுவாள்-அதில் சோரம்போன காய்களையும் ஒதுக்கச் சொல்லுவாள் பந்தமென்னும் கம்பளத்தைப் புரட்டச் சொல்லுவாள்-இனி படுக்க…
திக்குகள் எட்டிலும் தெரிந்திருப்பாள்-என் திகைப்பையும் தெளிவையும் கணக்கெடுப்பாள் பக்கத்தில் நின்று பரிகசிப்பாள்-என் பார்வையில் படாமலும் ஒளிந்திருப்பாள் நிர்க்கதியோ என்று கலங்குகையில்-அந்த நாயகி நேர்பட நின்றிருப்பாள் எக்கணம் எவ்விதம் நகருமென்றே -அவள் என்றோ எழுதி முடித்திருப்பாள்…
நாவல் பழநிறப் பட்டுடுத்தி-மின்னும் நகைகள் அளவாய் அணிந்தபடி காவல் புரிந்திட வருபவள்போல்-அன்னை காட்சி அடிக்கடி கொடுக்கின்றாள் ஆவல் வளர்க்கும் காட்சியிதும்-என் அரும்புப் பருவத்தில் தொடங்கியது வேவு பார்க்க வந்தவள்போல் -எங்கள் வீட்டு முற்றத்தை வலம்வருவாள்…
அயன்விரல் பிடித்தன்று அரிசியில் வரைந்தாள் அரிநமோத்து சிந்தம் கயல்விழி திருமுகக் கலைமகள் சிணுங்கலே கவிபாடும் சந்தம் உயர்வுற அவளருள் உடையவர் தமக்கோ உலகங்கள் சொந்தம் மயிலவள் மலர்ப்பதம் மனந்தனில் வைத்தால் வேறேது பந்தம் வெண்ணிறத் தாமரை வெய்யிலைச் சுமக்கும் விந்தையைக் காணீரோ பண்ணெனும்…
ஆயிரம் சூரியன் பார்வையில் சுடர்விடும் அன்னையின் திருமுகம் நிலவு தாயவள் கருணையின்பாய்படுத் துறங்கிட துன்பமும் இன்பமும் கனவு பாய்மரக் கப்பலில் போகிற பிள்ளைக்கு பயமில்லை சமுத்திர விரிவு தேய்வதும் வளர்வதும் தன்னியல் பெனும்மனம் தானாய்…
ஒருகுரல் கொடுத்தால் மறுகுரல் கொடுக்கும் உண்மை அபிராமி ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி காலனை…
அடர்ந்த வனந்தனில் ஒற்றைத் தடம்விழும் அழகாய்-வினை படர்ந்த மனந்தனில் பைரவி நீநடை பழகாய் தொடர்ந்து வருந்துயர்க் கனலில் உருகிடும் மெழுகாய்-மனம் இடரில் கரைகையில் திடம்தனைத் தந்திட வருவாய் ஏற்றிய தீபத்தில் இளநகை செய்பவள் யாரோ-பலர் சாற்றிய மறைகளில் சாரமென்றிருப்பவள் யாரோ காற்றினில் வருகிற கீதத்தில் அவளது பேரோ-திரு நீற்றினில் தகிக்கிற நெருப்பினில் அவளெழு…
இசையமைப்பாளர் யானிதேஷின் இசையில் “இன்னிசைக் காவலன்” என்ற திரைப்படத்துக்காக எழுதப்பட்ட பாடல் இது…… பல்லவி: சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே என்னவோ என்னவோ என்கனாவே கன்னிப்பெண் ஆசைகள் ஆயிரம் நெஞ்சுக்குள் என்னவோ ஊர்வலம் சின்னதாய் மோகங்கள்…