ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.எ ழுதிய கையும் அப்படித்தான். விளம்பர எழுத்தாளராய் வாழ்வை நடத்துவது ஒருவகையில் சுகமானது. ஒற்றைப்பொறி தட்டி ஒரு கருத்துரு தோன்றிவிட்டால் நல்ல பணம். சிரமமில்லாத வேலை. பிடி…

கோவையில் நான் எழுதிய தமிழ் விளம்பரங்கள் பரவலான கவனிப்பைப் பெற்றன. பொதுவாகவே,பெரிய நிறுவனங்களின் விளம்பர உருவாக்க வாய்ப்புகளைப் பெற, விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுவதுண்டு. தாமாகவே முன்வந்து விளம்பர டிசைன்களை உருவாக்கி வணிக ஒப்பந்தம்…

விளம்பரங்கள் எழுதுகிற வேலைக்கு காப்பி ரைட்டர் என்று பெயர். சினிமாவில் திரைக்கதை/காட்சி அமைப்பு/ வசனம் எழுதுவதை ஸ்க்ரிப்ட் என்று சொல்வதுபோல விளம்பரங்கள் எழுதுவதை காப்பி என்று சொல்கிறார்கள். பார்த்து எழுதுவது என்றும் படியெடுத்து எழுதுவது…

“அந்தப் பையனையே வரச்சொல்லீடுங்களேன்”. இப்படித்தான் எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் சொல்லியிருக்க வேண்டும்.எனக்கு அழைப்பு வந்தது.உடனே நீங்கள் நான் பள்ளி மாணவனாக வகுப்பில் இருந்தபோது பள்ளி உதவியாளர் வந்து “தலைமையாசிரியர் அழைக்கிறார்”என்று சொன்னதாய் எண்ணினால் அது…

ரயிலில் என் பக்கத்து இருக்கையில் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார் என்றுதான் முதலில் நினைத்தேன்.உண்மையில் அந்த இருக்கையில் அவர் ஒரு தம்பூரைப்போல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தார்.சீரான இடைவெளியில் அவரிடமிருந்து ஹ்க்கும் ஹ்க்கும் என்று சுருதி சேராத முனகல்கள்…

கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பாக 2011 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களும், கவியரசர் கண்ணதாசனின் உதவியாளரும்-“என் அண்ணன் கண்ணதாசன்” நூலின் ஆசிரியருமான திரு.இராம.முத்தையா அவர்களும் விருதுகள்…

கைரேகை படிந்த கல் கவிதை நூலின் ஆசிரியர் யாழி,அவ்வப்போது குறுஞ்செய்திகளாய் சில கவிதைகள் அனுப்புவார். பெரும்பாலும் அவருடைய கவிதைகள்.மற்றபடி அவர் ரசித்த வரிகள்-யார் எழுதினார் என்ற குறிப்புடன். எனவே அவர் அனுப்பும் குறுஞ்செய்திகளை, “இது…

இசை,இலக்கியம்,இயக்கம்.இந்தத் திரிவேணி சங்கமத்தில் கால் நனைத்துசில சமயம் கடலிலிறங்கி,அலைகள் காலுக்குக் கீழ் பள்ளம் பறிப்பதைப்போல் உணர்ந்தால் கரைக்கு வந்து சுண்டல் சாப்பிட்டபடியே ஏக்கமாய்முக்கடலின்உப்புக்காற்றுக்கு முகங்காட்டி அமரும் விதமாகத்தான் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை…

கதவைத் திறந்து கோடை நுழைந்து கனலால் கோலம் போடும் நேரம் மதகைத் திறந்து பெருகும் வியர்வை முதுகில் பாடும் கவிதை ஈரம் கண்னை உறுத்தும் காலை வெய்யில் மண்ணைக் கொளுத்தும் மதிய வெய்யில் சாலை…

“அண்ணே ! எங்க கட்சிக்கு ஓட்டு போட்டுடுங்க!” உறவோடும் உரிமையோடும் கேட்ட அந்தக் கட்சித் தொண்டர் எனக்கு நன்குஅறிமுகமானவர்.எப்போதும் லுங்கியிலும் எப்போதாவது எட்டுமுழ வேட்டியிலும் தென்படுவார்.தழையத் தழைய எட்டுமுழ வேட்டியில் எதிர்ப்பட்டால் கட்சி வேலையாய்…