ஒருவருடைய பலம்தான் அவருடைய சாதனைகளுக்கு முழுமையான காரணமாக இருந்தது என்று கூறமுடியாது. பலவீனமும் பல சாதனைகளுக்குக் காரணமாக அமையும். எப்படி என்றால், அவர்கள் தங்களின் பலவீனங்களிலிருந்து கற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்களிலிருந்து பல உண்மைகளைப் புரிந்துகொள்கிறார்கள்.…

நில நடுக்கம் நேரும்போதெல்லாம் வெட்டவெளிக்கு வந்துவிடுமாறு நிலவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். பூமி பிளந்து இறந்தவர்களைவிடவும் வீடு இடிந்து முடிந்தவர்களே அதிகம். அடைந்து கிடக்கும் வீட்டைத் துறந்து, விரிந்து பரந்த வெட்டவெளிக்கு வரும்போது வாழ்க்கை பாதுகாப்பாகிறது.…

        பணிவாய்ப்புக்கான பரிந்துரைகள் என்பதை இந்தத் தலைமுறை அறிந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை. தகுதி, முன்னுரை எழுத, ஆற்றல், அணிந்துரை எழுத, நேர்முகத்தேர்வு நிறைவுரை எழுதி, திறமையாளர்களின் காத்திருப்பை நிறைவு…

ஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் உறங்கிக்கிடக்கிறது ஒரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கிய பிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை.…

சிலரைப் பொறுத்தவரை, வெற்றியென்பது, வானத்திலிருந்து வருகிற வரம். கடவுள் கொடுக்கின்ற கொடை. ஜாதகம் செய்கின்ற ஜாலம். விதியின்மீது பாரத்தைப் போட்டு வீணாக நேரத்தைக் கழிப்பவர்கள், எப்போதும் சாதிக்கப்போவதில்லை. காலமும் இடமும் கருதிச் செய்வது வெற்றிக்கு…

இளமைக்காலத் தேடல்களில் ஒன்று, தலைமைக்கான தேடல். தன்னை வழி நடத்த இன்னொருவர் வேண்டுமென எண்ணும் பருவம் இது. நடிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள் வரை, பலராலும் ஈர்க்கப்படும் காலமிது. தலைவர்களைத் தேடுவதும் அவர்கள் பாதையினைப் பின்பற்றுவதும்…

கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது. உறக்கத்தில் சில கனவுகள் பிறக்கும். அவை விழிக்கும்முன்னரே விடை பெற்றுக்கொள்ளும். விழிப்பு நிலையில் வருகிற கனவுகள், செயல்வடிவம் பெற்று வெற்றியை எட்டும். கனவுகள்,…

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எல்லா வசதிகளும். ஆனால், தொட்டுப் பேசும் உரிமையில் பலருக்கும் தோழமை வாய்ப்பதில்லை. தோள் தொட்டுப் பேசுவது உறவுக்கும் உரிமைக்கும் அடையாளம். பரிவுக்கும், நட்புக்கும் அடையாளம். தோழனே! உனது தோள்களைத் தொட்டு நான்,…

திருவாரூர் அம்மானை ஒன்றில் இப்படி ஒரு பாடல் உண்டு. “ஈசன் பசுவாகி ஏமன் ஒரு கன்றாகி வீசுபுகழ் ஆருரின் வீதி வந்தார் அம்மானை” என்றொருத்தி பாடுகிறாள். பசுவும் கன்றுமாக வந்தார்கள் என்றால் அந்தப் பசுமாடு.…

சமயங்கள், மனித உயிரை உய்விப்பதற்கான ஏற்பாடுகள். ஆனால் காலப்போக்கில் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்த்துகிற அற்புதங்களை அடிப்படையாகக் கொண்டு மதங்களையும் மகான்களையும் மதிப்பிடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. யோகப் பயிற்சியை ஒருவர் கையாள்கிறபோது அந்தக் கலையில் ஏற்படுகின்ற…