சடசடக்கும் நெய்விளக்கில் சிரிப்பொலி காட்டி – அந்த சரவிளக்கின் அசைவினிலே சிலம்பொலி காட்டி படபடக்கும் மனதினுக்கு பக்குவம் தந்தாள் – எங்கள் பராசக்தி அபிராமி தரிசனம் தந்தாள்! நமசிவாயன் மேனியிலே பாதியை வென்றாள் –…
வரும்பகை கடிவாள் வாராஹி – தினம் வெற்றிகள் தருவாள் கருமாரி; திருவடி தொழுதிட திரள்பவர் மனங்களின் தயக்கங்கள் துடைப்பாள் ஶ்ரீகாளி! ஆயுதம் ஏந்தும் திருக்கரமும் – நல்ல அபயம் அளித்திடும் மலர்க்கரமும் மாயையை விலக்கும்…
வித்தில் முளையாகும் வித்தகி இல்லையேல் பத்தில் பதினொன்றாய் போயிருப்பேன் – தத்துவம் ஏதும் அறியாமல் ஏங்குகையில் வாழ்வளிக்க மாதரசி கொண்டாள் மனம். கற்கும் மொழியானாள்; கட்டும் கவியானாள் நிற்கும் சொல் சொல்கின்ற நாவானாள் –…
மழைமுகில் வண்ணம் அவள்வண்ணம் மழைதரும் கருணை அவள்வண்ணம் பிழைகள் பொறுப்பாள் பரிந்திடுவாள் பற்பல அற்புதம் புரிந்திடுவாள் குழையணி காதர் காதலிலே குதூகலம் காணும் மஹேஸ்வரியாள் விழைவுகள் யாவும் அருளிடுவாள் வித்தகி திருப்பதம் பரவிடுவோம்! மின்னலை…
விருந்தினர்களை முகமலர்ந்து வரவேற்பதற்கு குழந்தைகளை நாம் பழக்குவோமேயானால் அவர்கள் சமூக உணர்வு மிக்கவர்களாக வாழ்வார்கள் என்பதை நம் சமூகம் காலம் காலமாகக் கண்டிருக்கிறது. வீட்டிற்குள் வருபவர்களைப் பார்த்துக் கூச்சமின்றி உரையாட குழந்தைகள் பழகிவிட்டால் வெளியிடங்களுக்குச்…
இன்றைய நவீன குடும்பங்கள் எதிர் நோக்குகின்ற மிகப்பெரிய சவால்களில் ஒன்று இணக்கமில்லாத குடும்பங்கள். ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பேசுவதோ கூடி உண்பதோ அருகிப் போய்விட்ட காலச்சூழலில் நாம் வாழ்கிறோம். உணவு…
இறைவனே விரும்பி எழுந்தருளுகின்ற ஒரு திருக்கோயிலை அமைத்த அடியாரை கண்டு வணங்க வேண்டும் என்ற பேரன்போடு படைசூழ அரசன் புறப்பட்டு நின்றவூருக்கு வந்து சேர்கிறார். அறிவிப்பே இன்றி அரசன் வந்ததைக் கண்டு அந்த ஊர்…
எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன என்றும் எண்ணங்களே சக்தி மிகுந்தவை என்றும் மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் இன்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் தரமான மருந்து என்று தண்ணீரைக் கொடுத்தாலும்…
தொண்டு என்கிற போர்வையில் சுயநலமான போக்குகள் அரங்கேறிக் கொண்டு இருக்கிற சூழல் எந்தக் காலத்திற்கும் தேவையான அர்ப்பணிப்பு உணர்வை அழகாக பேசுகிற திருத்தொண்டர் புராணம் தன்னலம் இல்லாத தொண்டர்களை வளர்த்தெடுப்பதற்கான வழிகாட்டி நூல். அடிப்படையில்…
திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞானசம்பந்தருடைய திருப்பதிகங்களை யாழில் இட்டு இசைப்பதை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார். அவர் தம் துணைவியார் மதங்கசூளாமணியார் அந்தப் பதிகங்களை இசைப்பதில் கணவருக்குத் துணை நிற்கிறார். சோழ மன்னரிடத்தில் பணிபுரிந்து வந்த பரஞ்சோதியார்,…