தவத்தின் உச்சியில் தோன்றிய கடவுளின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தான் தவசி. சும்மா இருந்த கடவுளை இப்படி வம்புக்கிழுத்தா வேடிக்கை பார்ப்பது? கொணர்ந்த வரங்களை என்ன செய்வான் பாவம்! திண்ணையில் வைக்க அனுமதிக்கலாம்தான். கல்லாய்…
கப்பல் வருகிற திசையைப் பார்த்துக் கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம். வெளிச்சக் கூக்குரல் வீசிவீசித் திரைகடல் முழுவதும் தேடிப் பார்க்கும். தொலைந்துபோன பிள்ளையைத் தேடும் தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும். நிதான கதியில்…
சின்னப் பயணமாயிருந்தால்கூட உன்னிடம் சொன்ன பிறகுதான் கிளம்புவேன். அரைமணி நேரந்தான் ஆகுமென்றாலும் சொல்லியே ஆக வேண்டுமெனக்கு. தெருமுனை வரைக்கும் போவதும், உனக்குத் தெரியாமல் இதுவரை நிகழ்ந்தேயில்லை. இருப்புப் பாதையாய் நீளுமென் வாழ்க்கையில் பச்சை…
உன்… தோள்பை நிறையத் தங்கக் காசுகள். ஈதலுக்கானதோர் கர்வமில்லாமல் விரல்களை இழுத்து வலியப் பிரித்து எல்லோர் கையிலும் திணித்துப் போகிறாய். கொடுப்பது உனக்குக் கடமை போலவும் வாங்கிக் கொள்பவர் வள்ளல்கள் போலவும் பணிவும்…
குளிர்சாதன அறை கொடுக்காத சுகத்தில் உறைந்து போனவனாய் உள்ளே இருந்தேன் விறைக்கும் அளவு ஆனபின்னால்தான் வெப்பம் தேடி வெளியே நடந்தேன். குளிர்காய்வதற்கெனக் கூட்டிய நெருப்பில் அலட்சியத் தணலே அதிகமிருந்தது. நிராகரிப்பின் சூட்டைப் பொறுக்க…
பகடைக் காயாய்ப் புதிர்கள் உருள்கையில் திருப்பிப் போடத் தெரியவில்லை. வினாத்தாள் இருந்தும் விடைகளில்லாமல் தேர்வுகள் எழுதும் விபரமில்லை. கூட்டல் பெருக்கல் கணக்கைத் தவிர வகுத்தல் கழித்தல் விளங்கவேயில்லை. பரிசோதனைகள் பொய்யாய்ப் போயும் மூல…
சுடச்சுடச் செய்திகள் சுவைத்த காலம்போய் குளிர்ந்த சொல்லுக்குக் காத்துக் கிடக்கிறேன். மனிதர்களை விட்டு விலகிய நாட்கள் போய் தோழமையோடு தழுவிக் கொள்கிறேன். இறுக்கமான என் இயல்புகள் விட்டு நெருக்கமான நட்பில் திளைத்திருக்கிறேன். கணக்குகள் நிறைந்த…
முன்பொரு காலத்தில் தமிழ்மொழி மீதான ஈடுபாட்டை வளர்ப்பதில் அரசியல் இயக்கங்களுக்கு பெரிய பங்கிருந்தது. 50 களிலும் 60 களிலும் தேசிய இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் இதில் ஒரு போட்டியே நிலவிற்று. அந்த நாட்களில் தேசிய…
நாளைக்கொரு நந்தவனம் போயிருந்தேன் வந்து சேராத நேற்றுகளுக்காக அங்கேதான் நான் காத்திருந்தேன். நாளையின் நந்தவனம் மிக அழகானது நிறம் நிறமாய்க் கற்பனைகள் கண்பறிக்கும் இடமது. நேற்றுகள் கொண்ட மரண தாக்கத்தைத் தணிக்கிற ஊற்று…
பழைய காலத்துப் போர்வாள் ஒன்றை மலர்க் கூடைக்குள் மறைந்திருந்தார்கள். வீரன் ஒருவன் வெறி கொண்டு சுழற்ற குருதிப்புனலில் குளித்து வந்திருக்கும். தேக்கு தேகங்கள் கிழித்த வாளுக்குப் பூக்களின் ஸ்பரிசம் புதிதாயிருக்கும். வாள்முனையிருந்து வருகிற…