காற்று வீசுது உன் பக்கம் – நீ கண்கள் மூடிக் கிடக்காதே! நேற்றின் தோல்விகள் போகட்டும் -இந் நாளை இழந்து தவிக்காதே! பொறுமைத் தவங்கள் முடிகையிலே – நீ புதிய வரங்களை வாங்கிவிடு! உரிமை…
நானொரு வழிப்போக்கன்- ஆமாம்! நானொரு வழிப்போக்கன் வாழ்வின் நீண்ட வெளிகளை எனது பாதங்கள் அளந்து வரும் பாதையில் மாறிடும் பருவங்களால் ஒரு பக்குவம் கனிந்து வரும். பக்குவம் கனிந்து வருவதனால் ஒரு இலட்சியம் பிறந்து…
நேற்றைய மழைத்துளி காயவில்லை – அது தாவர வேர்களில் நுழைந்திருக்கும் நேற்றைய கதிரொளி போகவில்லை – அது நேற்றின் செயல்களில் நிறைந்திருக்கும் நேற்றைய சருகுகள் மறையவில்லை – அவை நிச்சயம் பூமியில் கலந்திருக்கும் நேற்றைய…
பூக்கும் வரையில் அரும்பின் நறுமணம் பூமிக்குத் தெரியாது! ஊக்கம்கொண்டவன் உன்மனக் கனவுகள் ஊருக்குப் புரியாது! கருவறைக்குள்ளே குழந்தை வளர்வது கடவுளின் ரகசியம்தான்! தருணம் வரும்வரை பொறுமை காப்பது கனவுக்கும் அவசியம்தான்! எத்தனை காலம் பிடிக்கும்…
வானவெளியில் பறவைக்கு வேலை எதுவும் கிடையாது! ஆன பொழுதும் பறக்கிறதே அது போல் நமக்கேன் முடியாது? கூடு இருப்பது மரக்கிளையில் கொள்ளும் தானியம் சமவெளியில் பாடித் திரிந்து பறப்பதெல்லாம் பரந்து கிடக்கிற வான்வெளியில்! வாழ்க்கை…
மூளை தலைமைச் செயலகம் என்றால் மனம்தான் கருவூலம்! நாளைய வரவும் நாளைய செலவும் இன்றே முடிவாகும்! கண்கள் உளவுத் துறையாய் ஆனால் மனம்தான் காவல்துறை! எண்ணங்கள் நடுவே தீமைகள் புகுந்தால் எழட்டும் அடக்குமுறை! தோள்கள்…
உலகம் என்கிற வெற்றிக் கோப்பை உள்ளது உனக்காக! சிலசில தோல்விகள் வருகையில் உள்ளம் சிதறுவது எதற்காக? வாழ்க்கை வீசும் வேகப்பந்துகள்; வெறிகொண்டு நொறுக்கிவிடு! பாறை போன்றது வாழ்க்கை & அதனை உளிகொண்டு செதுக்கிவிடு! ஆடும்…
பொறுப்பில்லாத மனிதர்க்கு வாழ்க்கை பொம்மலாட்டம் போலிருக்கும் இறுக்கிய கயிறுகள் இழுக்கிற இழுப்பில் கைகால் அசையும் நிலையிருக்கும்! நெருப்பில்லாத மனதுக்கு வாழ்க்கை நாடகம் நடப்பது போலிருக்கும் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாய் நிலை புரியாத வலியிருக்கும்…
சிறுத்தைகள் திரிகிற காடென்று சிறுமான் மேயாதிருப்பதில்லை; குறுகிய கவலையில் வாழ்பவர்கள் குறிக்கோள் என்றும் தொடுவதில்லை. பூமி பரந்தது அதிலுனக்குப் பாதை இருப்பது நிச்சயமே! ஆமை வேகம் உதறிவிட்டு நீயாய் எட்டிடு இலட்சியமே! காலம் எதையும்…
குப்பைகள் உரமாய் ஆகிறபோது கற்பனை நிஜமாய் ஆகாதோ – ஒரு கைப்பிடி தானியம் எறும்புகள் சேர்க்கும் நம்மால் சேமிக்க முடியாதோ? சொந்த முயற்சியில் சிலந்திதன் வலையை செய்துகொள்வதைப் பார்த்தாயோ – நீ சிந்தும் வியர்வையில்…