ஆயிரம் கனவுகள் அணிவகுக்கும் & நீ ஆணை பிறப்பிக்கக் காத்திருக்கும்! பாய்கிற குதிரையைத் தூங்கவிட்டால் & அது பாரம் சுமப்பதை மறந்திருக்கும்! ஓய்வெனும் பெயரில் உன்துடிப்பை & நீ ஓயச் செய்திடக் கூடாது! பாயும்…
எதிர்ப்படும் மனிதர்கள் முகங்களிலே என்னென்ன தெரியுதுதேடுங்கள் புதையல் எடுக்கும் அவசரத்தில் புதிராய்த் திரிவதைப் பாருங்கள் இருப்பதில் சிலபேர் மகிழ்கின்றார் இருந்தும் சிலபேர் அழுகின்றார் சலிப்பில் பலபேர் நடக்கின்றார் சிலர்தான் முழுதாய் வாழ்கின்றார் விந்தை மனிதர்கள்…
பூமியின் ஆயுள் என்னவென்றே -சிலர் புலம்பித் தள்ளிடுவார் சாமியின் ஆயுள் என்னவென்றும் – சிலர் சஞ்சலம் கொண்டிடுவார் ஆமிந்த உலகின் ஆயுளெல்லாம் நாம் ஆக்கும் செயல்களிலே தாமதம் இன்றி செயல்புரிந்தால் அவை தாமாய் நிலைத்திருக்கும்…
நேர்க்கோடுகளாய் நிமிர்ந்த வாழ்க்கையை யாரோ வளைத்தால் அது அகங்காரம்! நீயாய் வளைத்தால் அது அலங்காரம்! வளைந்து கிடந்த வில்லை இராமன் நிமிர்த்த முயன்றான் அதுவரை நியாயம். ஒடித்தான்: என்செய்? அவன் அவதாரம்!! வளைந்து கிடக்கும்…
தனித்தனியாய் நாமொரு துளி துளித்துளியாய் நாமொரு கடல் தனித்தனியாய் நாமொரு கனி கனி கனியாய் நாமொரு வனம் தனித்தனியாய் அனுபவங்கள் தொகுத்துவைத்தால் சரித்திரங்கள் தனித்தனியாய் சம்பவங்கள் தொகுத்துச் சொன்னால் சாதனைகள் தனித்தனியாய் தவத்திலிரு வரம்கிடைத்தால்…
காற்று நடக்கிற வான்வெளியில் – உன் கனவுகள் இருக்கும் பத்திரமாய் நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் – உன் நினைவில் இருக்கும் சித்திரமாய் கீற்று வெளிச்சம் படிந்தபின்னே – இருள் கூடாரங்கள் கலைத்துவிடும் ஆற்றல் அரும்பி…
விளையும் நிலத்தில் விதைகள் சுகம் வீணையின் நரம்பில் விரல்கள் சுகம் களைகள் களைந்த வயல்கள் சுகம் கனவுகள் நிறைந்த கண்கள் சுகம் முயல்வதில் வருகிற முனைப்பு சுகம் முத்திரை பதிக்கும் உழைப்பு சுகம் தயக்கங்கள்…
வானம் எனக்கென வரைந்து கொடுத்த வரைபடம் ஒன்றுண்டு நானே என்னைத் தேடி அடைந்திட நேர்வழி அதிலுண்டு ஊனெனும் வாகனம் ஒட்டி மகிழ்வது ஒருதுளி உயிராகும் ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது எங்கோ அதுபோகும் மாற்று…
குவளைத் தண்ணீர் குடித்துக் கிளம்பு குறிக்கோள் நோக்கிச் செல்ல கவலைக் கண்ணீர் துடைத்துக் கிளம்பு கருதிய எல்லாம் வெல்ல தவறுகள் தந்த தழும்புகள் எல்லாம் தத்துவம் சொல்லும் மெல்ல தவம்போல் உந்தன் தொழிலைத் தொடர்ந்தால்…
வானப் பரப்பிடையே – கரு வண்ணக் கருமுகில்கள் தேனைப் பொழிகையிலே – மணி திமிறிச் சிலிர்க்கிறது ஏனோ கடும்வெய்யில் – என ஏங்கிய ஏக்கம்போய் தானாய் குழைகிறது – விதை தாங்கி மலர்கிறது நேற்றைய…