ஆமடா குகையொன்று உள்ளே போகும் ஆயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார் வாமடா காலாங்கி ஐயர் நின்று வல்லவொரு கற்பமெல்லாம் அங்கே தின்றார் ஓமடா எந்தனுக்கும் கற்பம் ஈந்தார் உயர்ந்தவொரு தயிலமெல்லாம் அங்கே ஈந்தார்! -போகர் (போகர்…

வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர் ஆழி அளிப்பர் அரிதனக்கன்று ஆனஞ்சு உகப்பர் அறமுரைப்பர் ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறுக்கையர் பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே! -சுந்தரர்…

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே -திருமூலர் மனக்கவலையின் உச்சத்திலிருந்த மிருகண்டு முனிவரின் உள்ளம், தன் பாட்டனாராகிய குச்சகரை…

நான்கு திசைகளையும் நோக்கியிருந்த எண்கண்களும் மூடியிருக்க ஆழ்ந்த தவத்திலிருந்தான் நான்முகன்.படைப்புத் தொழிலின் கருத்தாவாய் பொறுப்பேற்ற காலந்தொட்டு பரமனிடம் ஞானோபதேசம் பெற வேண்டும் என்ற சங்கல்பம் அவனுக்கு. எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் நான்கு…

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே! -அவ்வை வாசுகி மேருவைக் கடைந்த வேகத்தைக் காட்டிலும் பலமடங்கு கூடுதலாய் தேவர்களின்…

கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட, அண்ணலை அச்சு தன்னை அனற்தனை அனந்தன் தன்மேல், நண்ணிநன்கு உறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை, எண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே! -நம்மாழ்வார்…

வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும் மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன்! வெண்ணிற வாரிதியின் கடைசலா, வாசுகியின் சீறலா…

நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகம் முகிழ்த்தன முறையே! -ஐங்குறுநூறு பிரபஞ்சம் என்னும் பேரரும்பின் மடல்கள் அவிழத் தொடங்கிய ஆதிகாலம். அண்டத்தின் நாபியிலிருந்து பொங்கியெழுந்தது ஓங்கார நாதம். படைப்புக் கலையின்…

உடல், மனம், உயிர் மூன்றும் அவற்றுக்குரிய நிலைகளில் சில தீமைகளும் ஆளாகின்றன. உடல் நோய் வாய்ப்படுகிறது. மனம் துயரடைகிறது. உயிரோ வினைகளால் பற்றப்படுகிறது. ஆத்தாள் என்பது நம் அகத்தில் இருப்பவள் – அப்த்தாள் என்பதன்…

அடுத்து சொல்லக்கூடிய பாடலையும் சேர்த்து 100 பாடல்களை நாம் சொன்னால் நமக்கு என்ன நேரும்? நூறாவது பாடலில் ஒரு கும்பாபிஷேகத்தையே நிகழ்த்துகிறார் அபிராமிபட்டர். கும்பத்தில் தெய்வத்தை நாம் ஆவாஹனம் செய்கிறோம், அக்னி வளர்க்கிறோம், ஆகாயத்தில்…