சொல்

April 21, 2018 0

சொல்லோ என்றும் புதியது சொல்லொணாத பழையது கல்லில் எழுத்தாய்ப் பதிவது கனலில் புடமாய் ஒளிர்வது நெல்மேல் சிறுவிரல் வரைவது நெருநலும் நாளையும் நிகழ்வது எல்லாம் சொல்லி நிறைவது இன்னும் சொல்ல முயல்வது

ஒளிவந்த பின்னாலும் இருள்வாழுமா ஒவ்வாத சொந்தங்கள் உடன்வாழுமா வெளியேறி நாம்காண வானமுண்டு வெளிவந்து திசைகாணும் ஞானமுண்டு கருவங்கள் கண்டாலும் காணாமலே கண்மூடி நாம்வாழ்ந்தோம் நாணாமலே பருவங்கள் திசைமாறும் பொழுதல்லவா பகையின்றி நடையேகல் நலமல்லவா காற்றோடு…

நிழல்தேடி நின்றதனால் நிஜம் மறந்தது- எனை நிஜம்தேடி வந்தபின்னும் நிழல்சூழ்ந்தது மழைதேடி வந்தபின்னும் செடிகாயுமோ-என் மாதேவனடிசேர்ந்தால் இருள்சேருமோ பகட்டான பந்தல்கள் நிழலல்லவே-அதில் பலநூறு ஓட்டைகள் சுகமல்லவே திகட்டாத அமுதுக்கு நானேங்கினேன் -அதன் திசைசேர்ந்த பின்னால்தான்…

கையிற் கரும்பிருக்க கண்ணில் கனிவிருக்க மெய்யிற்செம் பட்டுடைய மேன்மையினாள்- உய்யவே நன்றருளும் நேய நிறையுடையாள் சந்நிதியில் நின்றருளும் கோலத்தி னாள் நாளிற் கதிராய் நிசியில் நிலவாகி கோள்கள் உருட்டுகிற கைகாரி -தாளில் மலர்கொண்ட நாயகி…

கல்வி நிலையங்களின் விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம், மாணவ மாணவியருக்குப் பரிசளிக்கச் சொல்வார்கள். பரிசு வாங்கும் பிள்ளைகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அறிவிப்புகள் ஆரம்பமாகும். முதல் பரிசு – இரண்டாம் பரிசு – மூன்றாம் பரிசு. அப்புறம் “ஆறுதல் பரிசு.”…

ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக்கொள்கிறபோது, இளங்கோவனுக்கு செம்மலரையும் செம்மலருக்கு இளங்கோவனையும் அடையாளமே தெரியவில்லை. நீங்க இளங்கோவன் தானே, நீங்க செம்மலர் தானே என்கிறமாதிரி அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் அந்தக்குழந்தை பிறந்த…

ஆசிரியர் : திரு.இளஞ்சேரல் இளஞ்சேரலுடைய கருட கம்பம் உள்ளிட்ட எல்லா நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன். எல்லாப் பாத்திரங்களும் சட்டென்று மனதுக்குள் பதிந்துவிடும். வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். கட்சிதம் நாவல் முதல் வாசிப்பில் வேறு கதைக்களமாக…

உன்னத கணங்கள் வாழ்வில் நிகழ்வதோ ஒவ்வொரு நாளும்தான்; உன்னால் என்னால் காண முடிந்தால் உயர்வுகள் தினமும்தான்; தன்னினும் பெரிதாய் ஏதோ ஒன்று துணைக்கு வருகிறது; முன்னினும் வாழ்க்கை மேம்படும் வாய்ப்பை முனைந்தால் தருகிறது! எண்ணிய…

துளை கொண்ட ஒருமூங்கில் துயர்கொண்டா வாடும்? துளிகூட வலியின்றித் தேனாகப் பாடும்; வலிகொண்டு வடுகொண்டு வந்தோர்தான் யாரும்; நலமுண்டு எனநம்பி நன்னெஞ்சம் வாழும்! பயம்கொண்டால் ஆகாயம் பறவைக்கு பாரம்; சுயம்கண்டால் அதுபாடும் சுகமான ராகம்;…

பூஞ்சிறகில் புயல் தூங்கக் கூடும் – அது புறப்படும்நாள் தெரிந்தவர்கள் இல்லை தேன்துளியில் கலை பதுங்கக்கூடும் – அது தீப்பற்றும் நாளறிந்தோர் இல்லை வான்வெளியும் விடுகதைகள் போடும் – அது விளங்கும் பதில்சொல்பவர்கள் இல்லை ஆனாலும் நம் பயணம்…