களிற்று வடிவே கலியின் முடிவே கண்ணிறை அழகே சரணம் ஒளிக்கும் ஒளியே ஓமெனும் ஒலியே ஒப்பில் முதலே சரணம் துளிர்க்கும் தருவில் தோன்றும் தளிரே துணையே திருவே சரணம் களிக்கும் மகவே கருணைக் கனலே…

இதுவரை மக்கள் தொலைக்காட்சியில் மகான்கள் பற்றி பேசி வந்தேன்…இனி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.50 மணிக்கு “பிறவிப் பெருங்கடல்”என்னும் தலைப்பில் பேசுகிறேன்.. பிரியமான மனிதர்களிலிருந்து பிரம்மாண்டமான ஆளுமைகள் வரை….. சின்னச் சின்ன…

(பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்  நலம்பெற வேண்டி…) நல்லால மரமொன்று  நெடுநாளாய் இருக்கிறது சொல்லாத வேதமெல்லாம் சொன்னபடி நிற்கிறது கல்லால மரநிழலில் கால்மடித்த உபதேசி நில்லாமல் தொடங்கிவைத்த நெடுமரபின் நீட்சியது; வேதபுரப் பறவைகளும் வந்ததிலே…

பிம்பங்கள் எதுவும் பேசவில்லை-உன் படங்களின் மௌனம் என்ன நிறம்? நம்மிடை மலர்ந்தது நேசமெனில்-அதன் நேர்த்தியும் பதமும் என்னவிதம்? இம்மியும் நெருக்கம் குறையவில்லை-இரு இதழ்களின் சுழிப்பாய் இந்த இதம் நிம்மதி தருமுன் தழுவலினை-இந்த நொடியினில் நினைத்தேன்..என்ன…

 உடலெனும் கனவு; சுடலையில் விறகு;  கடலெனும் வினைகள்  கடந்திடும் படகு; படகில் சிலபேர் பவவினை கடப்பார்; படகைச் சிலபேர் பாதியில் கவிழ்ப்பார்; கற்றவை ,கேட்டவை, கண்டவை என்று பற்றுச் சரக்குகள் பலவும் குவிப்பார் விற்று…

காரணம் தெரியவில்லை.. அவன் காம்போதி வாசித்தான் சுரங்களின் சுவடறியா.. கரங்களில் குழலேந்தி இதுவரை தொட்டறியா துளைகளில் விரல்தடவி எவரும் கேட்டறியா இதத்தில் இங்கிதத்தில்… தவமியற்ற அமர்ந்தவுடன் தேடிவந்த வரம்போல காரணம் தெரியவில்லை…அவன் காம்போதி வாசித்தான்…

கருவி இசைத்துக் கற்றானா கருவில் இருந்தே பெற்றானா சரிகம பதநி சுரங்களெல்லாம் சுடர்விரல் நுனிகளில் உற்றானா வரிகளில் இசையைக் கண்டானா வானின் அமுதம் தந்தானா ஒருமுறை வந்த இசை மன்னன் உலகுக்கு மீண்டும் வருவானா…

      கவியரசு கண்ணதாசனின் ‘மலர்ந்தும் மலராத பாதிமலர்போல’’ எனும் பாடலை ஸ்லீப்வெல் படுக்கை விளம்பரத்திற்கு தவறான பொருளில் பயன்படுத்தியதைக் கண்டித்து கோவை கண்ணதாசன் கழகம் நடத்திய கண்ணதாசன் விழாவில் மரபின்மைந்தன் முத்தையா…

 மறையா மறைபொருளே; மாதவமே; என்றும் குறையா கருணைக் கடலே- நிறைந்தாயோ! பொன்மேனி தன்னை பழஞ்சட்டை போலுதறி நின்றாயோ எங்கும் நிலைத்து. ஒப்பில் உயர்ஞான உத்தமனே; உண்மைகள் செப்பவே வந்தனை செம்மலே-கப்பலாய் மூட்டைவினை யேற்றி மனிதர்…